களங்கம், சிண்டெமிக்ஸ் (syndemics) மற்றும் செக்ஸ் (S3-பிளஸ்) ஆய்வு

S3-பிளஸ் ஆய்வு குறித்து

S3-பிளஸ் ஆய்வானது, பெங்களுருவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (என்ஐஏஎஸ்) NIAS டாக்டர் அலீனா செபாஸ்டியன் தலைமையில், பாலியல் மற்றும் சுகாதார ஆராய்ச்சி மற்றும் கொள்கைக்கான மையம் (சி-ஷாப், சென்னை) (C-SHaRP, Chennai), தமிழ்நாட்டில் உள்ள சகோதரன் மற்றும் தோழி ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இது சர்வதேச எய்ட்ஸ் தடுப்பூசி முயற்சியால் (IAVI) நிதியளிக்கப்படுகிறது.


ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் (MSM) அல்லது திருநங்கைகள் (TGW) என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு சென்னை நகரம் அல்லது தமிழ்நாட்டில் வசிப்பவர்களிடம் S3-பிளஸ் ஆய்வு நடத்தப்படுகிறது. உங்கள் பாலியல் அல்லது பாலின சிறுபான்மை நிலை மற்றும் கோவிட்-19 காரணமாக நீங்கள் அனுபவிக்கும் மன அழுத்தங்களைப் புரிந்துகொள்ள இந்த ஆன்லைன் ஆய்வு எங்களுக்கு உதவும். எச்.ஐ.வி ஆபத்துகள் மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகல் ஆகியவற்றில் இந்த அழுத்தங்களின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளவும் இது எங்களுக்கு உதவும்.


DBT வெல்கம் டிரஸ்ட் இந்தியா அலையன்ஸ் நிதியுதவியுடன் கூடிய 'Stigma, Syndemics and Sex' (S3-பிளஸ்) என்றழைக்கப்படும் ஆய்வின் விரிவாக்கமாகும். இது டாக்டர். வெங்கடேசன் சக்ரபாணி, MD, PhD (C-SHaRP, சென்னை) தலைமையில் நடத்தப்பட்டு. S3-பிளஸ் என்பது (S3-பிளஸ்) apd; விரிவாக்கம் ,e;j ஆய்வில் உங்களில் சிலர் மூன்று மாதங்களுக்கு முன்பே பங்கேறிருப்பீர்கள்.

  • S3-பிளஸ் ஆய்வு - தரவு சேகரிப்பு

    இந்த S3-பிளஸ் ஆய்வானது சென்னை மற்றும் தமிழ்நாடு வாழ் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் திருநங்கைகள் மத்தியில் நடத்தப்படுகிறது. இந்த ஆய்வானது சென்ளையிலுள்ள சி.சார்ப் (C-SHaRP) மற்றும் சகோதரன்/தோழி ஆகிய சமூக அமைப்புகளுடன் நடத்தப்படுகிறது.

    ஆய்வு: இந்த ஆய்வில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் பங்கேற்கும் பங்கேற்பாளரிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்படும். இந்த S3-பிளஸ் ஆய்வானது DBT வெல்கம் டிரஸ்ட் இந்தியா அலையன்ஸ் நிதியுதவியுடன் நடந்து முடிந்த களங்கம் சின்டெமிக்ஸ் மற்றும் செக்ஸ் (S3-பிளஸ்) என்னும் ஆய்வின் விரிவாக்கமாகும். S3-பிளஸ் ஆய்வில் பங்கேற்ற பங்கேற்பாளர்களை சகோதரன்/தோழி ஆகிய சமூக அமைப்புகள் மூலமாகவும் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் பங்கேற்கச் செய்தோம் இந்தS3-பிளஸ் ஆய்வில் ஏற்கேனவே பங்கேற்ற பங்கேற்பாளருடன் சேர்ந்து தகுதிவாய்ந்த புதிய பங்கேற்பாளர்களும் பங்கேற்பார்கள்.

  • நெறிமுறைகள்

    S3-பிளஸ் ஆய்வில் பங்கேற்பது முழுக்க முழுக்க சொந்த விருப்பமாகும் மற்றும் உங்களின் பங்கேற்பு இரகசியமாக வைக்கப்படும். இந்த ஆய்வானது தகுதிவாய்ந்த பங்கேற்பாளர்கள் மத்தியில் நடத்தப்படும் மற்றும் அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்பே நடத்தப்படும். பங்கேற்பாளரிடம் பொறப்பட்ட தகவல்கள் அனைத்தும் இரகசியமாக வைக்கப்படும் மற்றும் அவர்களை தனிப்பட்ட முறையில் அடையாளம் கானும் எந்த தகவல்களும் பெறப்படமாட்டாது அல்லது பிரசுரிக்கப்படாது குழு தரவுகள் மட்டுமே பிரசுரிக்கப்படும். ஆய்வில் பங்கேற்க தகுதிவாய்ந்த பேட்டியாளர்கள் மட்டுமே ஒப்புதள் படிவத்தை படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

    நீங்கள் இந்த ஆய்வில் பங்கேற்க தகுதி வாய்ந்தவரா என்பதை இதை கிளிக் செய்வதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.